Published:Today at 3 PMUpdated:Today at 3 PM
Digital India | டிஜிட்டல் இந்தியா ( AI )
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அரசு சேவைகளைப் பெற நாம் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து, நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய ஸ்மார்ட்போனே ஒரு மினி அரசு அலுவலகமாக மாறிவிட்டது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கவும், பணப் பரிவர்த்தனைகளை முறைப்படுத்தவும், முக்கியமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாகச் சேமிக்கவும் பல பயனுள்ள ஆப்கள் (Govt apps) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



